இவற்றால் உங்கள் இளமைத் தோற்றம் பறி போவதுடன், நோய்கள் ஏற்பட காரணமாகி வாழ்நாட்களையும் குறைத்து விடுகின்றன. இதோ, உங்கள் இளமைத் தோற்றத்தை பாதுகாக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:
1. இறுக்கமான வாழ்க்கை முறையை மாற்றிவிடுங்கள். பல வேலைகளையும் ஒரே நேரத்தில் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வதால் மன அழுத்தம்
ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இளமைத் தோற்றம் குறையும்.
2. இனிப்புப் பண்டங்களை உணவில் அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதிக இனிப்பு கண்களுக்கு கீழ் கரு வளையம், தோல் சுருக்கம், உடல் பருமன் போன்றவற்றிற்கு காரணமாகிறது.
3. இரவு குறைந்தது ஏழு மணி நேரமாவது உறங்க வேண்டும். உறக்கத்தை தொலைத்தால் ஆரோக்கியம் கெட்டு, இளமையும் தொலைந்து விடும்.
4. தொலைக்காட்சிக்கு அடிமையாக வேண்டாம். தற்போதைய ஆய்வுகளின் முடிவுகள், உலகில் தொலைக்காட்சிக்கு அடிமையான பெரும்பாலானவர்கள் இளம் வயதிலேயே முதுமைத் தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள் என கூறுகின்றன. மணிக்கணக்கில் தொடர்ந்து தொலைக்காட்சி முன் அமரும் போது மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
5. பெரும்பாலான இளமைத் தோற்ற பாதிப்புகளுக்கு சூரியனிடமிருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்களே காரணம். எனவே, வெயில் காலங்களில் தகுந்த பாதுகாப்பு அணிகலன்கள் இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
6. அதிக எண்ணிக்கையிலான வாசனை திரவியங்கள், கிரீம்கள் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக வசீகரத்தைக் கூட்டுவதற்காகப் பயன்படும் வாசனை திரவியங்களிலும் கிரீம்களிலும் செயற்கை ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதால் அவற்றை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
7. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களாவது 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நம் இளமைத் தோற்றத்தை காக்கும். காலை அல்லது மாலை நடைப்பயிற்சியும் நல்ல பலன் கொடுக்கும்.
8. ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் இளமைத் தோற்றத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சாலமன் மற்றும் மெக்கரல் மீன் வகைகளிலும், வாதுமைப் பருப்புகளிலும் இவ்வகைக் கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவு உள்ளன.