கல்லூரி தேர்வில் குழுவாக அமர்ந்து காப்பியடித்த மாணவ மாணவிகள்

பீகாரில், கல்லூரி தேர்வில், பங்கேற்ற மாணவர் மற்றும் மாணவிகள் புத்தகங்களை கொண்டு வந்து காப்பியிடித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

போலி சான்றிதழ் வழக்கில் டில்லி சட்ட அமைச்சர் தோமர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், பீகாரின் கல்வி நிலை உலகறிந்த
நிலையில், தற்போது, அங்கு கல்லூரி தேர்வில் குழுவாக அமர்ந்து காப்பியெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோமர், போலி சான்றிதழ் தொடர்பாக முங்கர் மாவட்டத்தில் வைத்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த இடத்திலிருந்து 200 கி.மீ., தூரரத்தில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி.எஸ்சி., படிப்புக்கான தேர்வு இன்று நடந்தது.

3000 பேர் பங்கேற்ற இந்த தேர்வு, 800 பேர் அமரக்கூடிய அறையில் நடந்தது. இந்த தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகள், தேர்வு வளாக காரிடர், வாசல், ஜன்னல் மற்றும் தாங்கள் விரும்பிய இடத்தில் அமர்ந்து தேர்வு எழுதினர். தேர்வின் போது, புத்தகங்களில், விடைகள் இருந்த பக்கங்களை கிழித்தும், புத்தகத்தையை கொண்டு வந்து காப்பியடித்தனர். மொபைல் போன் உதவி மூலம் விடைகளை அறிந்து தேர்வு எழுதினர்.இவர்களை கண்காணிப்பாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு மாணவிகளுக்கு 3 பேர் காப்பியடிக்கவும் உதவி செய்தனர்.
தேர்வு கண்காணிப்பாளர் அனில் குமார் கூறுகையில், 800 பேர் அமரக்கூடிய அறையில், 3 ஆயிரம் பேர் பங்கேற்றதால், தரையில் அமர்வதை தடுக்க முடியவில்லை. ஆனால் காப்பியடித்தது பற்றி எதுவும் தெரியாது. ஆனால் நிலையையை எங்களால் முடிந்தளவு கட்டுப்படுத்தினோம் என கூறினார்.

பீகாரில் கடந்த மார்ச் மாதம், நடந்த பள்ளி தேர்வின் போது, மாணவர்கள் காப்பியடிக்க உதவி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து பல மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டதும், பல பெற்றோர் மற்றும் போலீசார் கைது செய்யப்பட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...