ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்: கண்டறிய புதிய மொபைல் செயலி

மாக ரத்தம் தேவைப்படும் நேரங்களில் அருகில் உள்ள ரத்த வங்கிகளைக் கண்டறிய உதவும் புதிய மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

ரத்த தானம் செய்பவர்களால் ரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்படும் ரத்தம், அவசர காலங்களில் ரத்தம் தேவைப்படும் போது
மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுகிறது.

தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் நாடு முழுவதும் 2760 உரிமம் பெற்ற ரத்த வங்கிகளை பதிவு செய்துள்ளது. தலைநகர் புதுடில்லியில் உள்ள 72 ரத்த வங்கிகள் உட்பட நாட்டின் பிற பாகங்களில் உள்ள 524 ரத்த வங்கிகளின் விவரங்களை தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியில் தெரிந்து கொள்ள முடியும். மீதமுள்ள மற்ற ரத்த வங்கிகளின் விவரங்களும் விரைவில் சேகரிக்கப்பட்டு விடும்.

தேசிய எய்ட்ஸ் தடுப்பு நிறுவனமும், மத்திய குடும்ப சுகாதார நிறுவனமும் இணைந்து ஜூன் 14ஐ ரத்த தானம் செய்பவர்களின் தினமாக கொண்டாடுகின்றன. தன்னலம் கருதாமல், தங்களது விலை மதிப்பில்லாத ரத்தத்தை வழங்குபவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ரத்த தானம் செய்பவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மக்களிடையே ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரத்த தானம் பற்றி குறும்படப் போட்டி ஒன்றிற்கும் தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...