மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கு பாடுபடுவோருக்கு தேசிய விருதுகள்: விண்ணப்பிக்க 10-ம் தேதி கடைசிநாள்

மத்திய அரசின், சமூக நீதி மற்றம் அதிகாரம் வழங்கும் (மாற்றுத் திறனாளிகள் நலன்) அமைச்சகத்தால், மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கென சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு தேசிய விருதுகள் 3.12.2015 அன்று புதுடெல்லியில் கீழ்குறிப்பிட்ட பிரிவுகளில் வழங்கப்படவுள்ளன.

 1) மாற்றுத் திறனாளிகளில் சிறப்பாக பணிபுரிபவர்கள்/சுயதொழில் புரிபவர்கள் 2) சிறந்த பணியமர்த்தப்படும் அலுவலர் / நிறுவனம் 3) மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பாக சேவை புரிந்த தனிநபர் / நிறுவனம், 4) மாற்றுத் திறனாளிகளில் முன்னோடியாகத் திகழ்பவர்கள் 5) மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையிலான சிறந்த செயல்முறை ஆராய்ச்சி பணி/தொழில் நுட்பம் அல்லது கண்டுபிடிப்புகளுக்கு 6) மாற்றுத் திறனுடையோருக்கு தடையற்ற சூழ்நிலையை ஏற்படுத்திய சிறந்த பணிக்காக 7) மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கிய சிறந்த மாவட்டம் 8) தேசிய மாற்றுத் திறனுடையோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் திட்டத்தினை செயல்படுத்தும் மாநில அளவிலான முறைப்படுத்தும் நிறுவனம் 9) சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனுடைய நபர்கள் 10) சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனாளி குழந்தைகள் 11) சிறந்த பிரெய்லி அச்சகம் 12) மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய சிறந்த இணையதளம் 13) மாற்றுத் திறனாளிகளின் அதிகார பகிர்வினை ஊக்கப்படுத்தும் சிறந்த மாநிலம் 14) சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் மேற்குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் / நிறுவனங்கள் இதற்கான விவரங்களை www.disabilityaffairs.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், உரிய விண்ணப்பப் படிவத்தை இணைய தளத்தில் இருந்து கீழிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அல்லது “மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகம், கே.கே. நகர், சென்னை-78” ஆகியவற்றிலிருந்து பெற்று தக்க இணைப்புகளுடன் வருகிற 10.7.2015க்குள் 2 நகல்களில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரின் பரிந்துரையுடன் “மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், கே.கே.நகர், சென்னை 600 078” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 10.7.2015க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...