மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 1,200 தொடக்கப் பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி 1,200 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக ஆசிரியர் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் 40 வயதைக் கடந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவியலாளர்கள் என எந்தப் பிரிவினரை எடுத்துக் கொண்டாலும் அவர்களில் 90 சதவீதம் பேர் அரசு பள்ளிகளில் படித்தவர்களாகத் தான் இருப்பர்.
ஒரு கால கட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
எனவே, மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி, 1,200 பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
மாறாக, இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, குறைந்த அளவில் மாணவர்கள் உள்ள 1,200 பள்ளிகளையும் மாதிரிப் பள்ளிகளாக அறிவித்து மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.