தமிழகத்தில் குரூப்- 2 முதல் நிலைத் தேர்வு,
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26)
நடைபெறுகிறது. இதில் 6 லட்சம் பேர்
பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் குரூப் 2 தொகுதியில் வணிக வரித்
துறை இணை அதிகாரி (8 காலியிடங்கள்), சார்
பதிவாளர் (23 காலியிடங்கள்), தொழிலாளர் நலத்
துறையின்உதவி ஆய்வாளர், உதவிப் பிரிவு
அலுவலர் என மொத்தம் 1,241 காலியிடங்கள்
உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு
நடத்துவதற்கான அறிவிக்கை கடந்த ஏப்ரல்30-
ஆம் தேதி வெளியிடப்பட்டது.இந்தத் தேர்வானது
தமிழகத்தில் 114 இடங்களிலுள்ள உள்ள 2,094
தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை
நடைபெறுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்
பாலசுப்பிரமணியன் கூறியதாவது
:குரூப் 2
முதல் நிலைத் தேர்வு எழுதுவதைக்
கண்காணிக்கும் பணியில் 50 ஆயிரம் பேர்
ஈடுபடுகிறார்கள்.
அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய்
அலுவலர்கள் தங்களது மாவட்டங்களுக்கு
உள்பட்ட தேர்வு மையங்களுக்குச் சென்று
தேர்வை ஆய்வு செய்வர்.இந்தத் தேர்வை 6
லட்சத்து 20 ஆயிரத்து 220 பேர் எழுதுகின்றனர்.
தேர்வு எழுதுபவர்களில் பெரும்பாலானோர்
பொறியியல் பட்டம் படித்தவர்கள்.தேர்வு காலை
10 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கிறது.
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பிரதானத்
தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதிலும்
தேர்ச்சி பெறுபவர்கள், நேர்முகத் தேர்வுக்கு
அழைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்றார்SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...