காரைக்குடி அழகப்பா இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., பி.டெக்., நேரடி 2ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 26ல் துவங்கியது.
பொதுப்பிரிவு சிவில்துறை கலந்தாய்வில் 4,200ல் 3,580 பேர்
சேர்ந்தனர். மெக்கானிக் பிரிவில் 7, 200ல் 6,333 மாணவர்கள், எலக்ட்ரானிக் பிரிவில் 7, 700ல் 6,546 பேர், பி.எஸ்.சி., முடித்தவர்களுக்கான பிரிவில் 14 பேரில் 7 பேரும் சேர்க்கை உத்தரவு பெற்றனர்.
வரப் பெற்ற 19 ஆயிரத்து 620 விண்ணப்பங்களில் 17 ஆயிரத்து 700 பேர் மட்டுமே சேர்ந்தனர். தமிழகத்திலுள்ள 533 இன்ஜினியரிங் கல்லூரிகளிலுள்ள 2ம் ஆண்டுக்கான மொத்த காலியிடம் 1 லட்சத்து11 ஆயிரத்து 234 ஆகும். இதில் 16, 700 மாணவ, மாணவிகள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
நேற்றுடன் கலந்தாய்வு முடிந்தது. 94 ஆயிரத்து 534 இடங்களில் காலியாக உள்ளன. சேர்க்கை உத்தரவு பெற்ற மாணவர்கள் ஜூலை 13க்குள் கல்லூரியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் மாலா, ஒருங்கிணைப்பாளர் கணேசன் செய்துள்ளனர்.