சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.பி.பி.எஸ். படிப்புக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற, 2015-16-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கான முதல்கட்டக் கலந்தாய்வில் மொத்தமுள்ள 150 இடங்களில் 124 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள 26 இடங்களுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கலந்தாய்வுக்கு 150 மாணவ, மாணவிகள் தரவரிசைப்படி அழைக்கப்பட்டிருந்தனர். இந்தக் கலந்தாய்வின் மூலம் காலியாக இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு 16, தாழ்த்தப்பட்ட பிரிவினர் (அருந்ததியர்) 1, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 9 ஆகிய 26 இடங்களும் நிரப்பப்பட்டன.
பி.டி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வில் மொத்தமுள்ள 80 இடங்களும் ஏற்கெனவே நிரம்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.