21 போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி.

பல்கலைக் கழக மானிய குழு (யு.ஜி.சி.) 21 போலிப் பல்கலைக் கழகங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக வெளியிடப்பட்ட இந்த 21 பல்கலைக் கழகங்களில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 8 உள்ளது. தலைநகர் டெல்லியில் 6 உள்ளது. மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் தலா 1 போலி பல்கலைக் கழகங்களை பட்டியலிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956-ன் படி மத்திய/மாநில/மாகாண சட்டம் அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவு 3-ன் படி பல்கலைக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டவையே முறையான பல்கலைக் கழகங்கள்.

னவே விதிமுறைகளுக்கு ஏற்ப முறையான தகுதி இல்லாத கல்வி நிறுவனங்கல் தங்களை சட்டப்பிரிவு 23-ன் படி பல்கலைக் கழகம் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது. டெல்லியில், வரன்சேயா சமஸ்கிருத விஸ்வ வித்யாலயா கமர்ஷியல் யுனிவர்சிட்டி, யுனைடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி, வோகேஷனல் யுனிவர்சிட்டி, ஏடிஆர் செண்ட்ரல் ஜுரிடிகல் யுனிவர்சிட்டி உள்ளிட்ட 6 போலி பல்கலைக் கழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...