டிப்ளமோ நர்ஸிங் படிப்பு விண்ணப்ப விற்பனை 22-ம் தேதி தொடங்குகிறது: பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

அரசு செவிலியர் பள்ளிகளில் டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை 22-ம் தேதி தொடங்குகிறது.

அரசு செவிலியர் பள்ளிகளில் 2015 - 2016-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை 18 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 9 மாவட்ட அரசு தலைமை
மருத்துவமனைகளில் வரும் 22-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) நடைபெற உள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை நேரில் பெறுப வர்கள், அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அல்லது தலைமை மருத்துவமனை இணை இயக்குநருக்கு விண்ணப்ப மனுவுடன் சென்னையில் பணமாக மாற்றத்தக்க வகையில் ரூ.250-க் கான கேட்பு வரைவோலையை (டிடி) சமர்ப்பித்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். தேசிய மயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் ‘செயலாளர், தேர்வுக் குழு’ என்ற பெயரில் வரைவோலை எடுக்கப்பட வேண்டும். தாழ்த்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) மற்றும் பழங் குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் சாதி சான்றிதழின் 2 நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பு ஏட்டை www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பத்துடன் கோடிட்ட கேட்பு வரைவோ லையை இணைத்து அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள் கேட்பு வரைவோலை இணைக்கத் தேவையில்லை.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் மட்டுமே அரசு செவிலியர் பள்ளிகளில் டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். 31.12.2015-ல் விண்ணப் பதாரர் குறைந்த பட்சமாக 17 வயதும், அதிகபட்சமாக 35 வயதும் நிரம்பியவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில மேல்நிலை கல்வி குழுமத்தால் நடத்தப்படும் மேல்நிலைத் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மற்ற வகுப்பை சேர்ந்த வர்கள் 40 சதவீதத்துக்கு குறை யாமல் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். தமிழ் மொழியை முதல் பாடமாக எடுத்து தேர்ச்சி வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...