பிளஸ் 2 மாணவர்களுக்கு புதன்கிழமை (ஜூலை 15) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் மாணவர்கள் இந்தச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. உயர் படிப்புகளில் சேரும் மாணவர்களின் நலன் கருதி முதல் முறையாக பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்த ஆண்டு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டது. விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவை முடிவடைந்த நிலையில், இப்போது அனைத்து மாணவர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்யலாம்: பிளஸ் 2 மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றதும் பள்ளியிலேயே ஆன்-லைன் வழியாக வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்யலாம். இந்தத் திட்டத்தை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடக்கி வைக்கிறார்.