திறமைசாலிகள் வேறு நிறுவனங்களுக்கு செல்வதைத் தடுக்கவும், மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக்குவிக்கவும், வருடாந்திர லாபத்தில்
3 சதவீதத்தை பரிசாக அளிக்க, நாட்டின் முன்னணி வங்கியான, பாரத ஸ்டேட் பாங்க் திட்டமிட்டுள்ளது.
நாட்டின் பெரிய வங்கியாக, பாரத ஸ்டேட் பாங்க் திகழ்கிறது. இதில், 2.3 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் கூடுதல் ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை தரப்படுவதால், திறமையான வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேறு நிறுவனங்களுக்கு தாவி விடுகின்றனர். இதனால், வங்கிப் பணிகள் பாதிக்கின்றன. இதற்கு முடிவு கட்ட, பாரத ஸ்டேட் பாங்க், ஊழியர்களுக்கு வருடாந்திர லாபத்தில் பரிசு அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, பாரத ஸ்டேட் பாங்க் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
எத்தகைய சவால்களையும் சமாளிக்கும் பண்பை ஊழியர்களிடம் ஏற்படுத்த, அவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் தர வேண்டியது அவசியம். இதன் மூலம், ஊழியர்களை பொறுப்பானவர்களாக, முழுதிறமையை வெளிப்படுத்துபவர்களாக உருவாக்க முடியும். வங்கி ஊழியர்களுக்கு, வருடாந்திர லாபத்தில் 1 சதவீதம் பரிசாக அளிக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இப்பரிசை, 3 சதவீதமாக உயர்த்த வேண்டியது அவசியம்.
மேல்நிலை நிர்வாகம்மற்றும் நடுநிலை நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு, பொதுத் துறையில் வழங்கப்படுவதை விட, தனியார் துறையில் அதிக ஊக்கப்பரிசுகள் தரப்படுகின்றன. வங்கிப் பணிகளில் கடின உழைப்பாலும், திறமையாலும் மேல்நிலைக்கு உயர்ந்தவர்களை, தனியார் துறையினர், கூடுதல் சலுகைகள் அளித்து எளிதாக ஈர்த்துக் கொள்கின்றனர்.
வங்கித் துறையில் புதிது புதிதாக வங்கிகள் நுழைந்து கொண்டிருக்கும் சமயத்தில், திறமைசாலிகள் புதிய நிறுவனங்களுக்கு சென்று விடுவது சகஜமாகி வருகிறது. இதனால் எழும் போட்டியை எதிர்கொள்ள, ஊழியர்களுக்கு சிறப்பான ஊதியம் மற்றும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட வேண்டியது அவசியம். இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சருக்கு பரிந்துரை அளித்துள்ளோம். இவ்வாறு அருந்ததி பட்டாச்சார்யா கூறினார்.
முன்னேற்ற பாதையில் ஸ்டேட் பாங்க்
* கடந்த, மார்ச்சுடன் முடிந்த நிதியாண்டில், பாரத ஸ்டேட் பாங்க்கின் லாபம் 20 சதவீதம் அதிகரித்தது.
* கடந்த 2014 - 15ல், இந்த வங்கியின் நிகர லாபம் 13,101 கோடி ரூபாய்.
* கடந்த 2013 - 14ல், ஈட்டிய நிகர லாபம், 10,981 கோடி ரூபாய்.
* கடந்த, மார்ச்சுடன் முடிந்த நிதியாண்டில், வங்கிக்கு கிடைத்த மொத்த லாபம் 16,994 கோடி ரூபாய்.
* கடந்த 2014 மார்ச்சில் முடிந்த நிதியாண்டில், மொத்த லாபம் 14,173 கோடி ரூபாய்.
* வங்கியில் 2.3 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
* வங்கி, 1921ல் துவக்கப்பட்டது; அப்போது, அதற்கு, 'இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா' எனப் பெயர்.
* 1955ல், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* மும்பையில் இதன் தலைமையகம் உள்ளது.
* நாடு முழுவதும் இதற்கு 17 ஆயிரம் கிளைகள் உள்ளன.
* வெளிநாடுகளில் 190 அலுவலகங்கள் உள்ளன.
எத்தகைய சவால்களையும் சமாளிக்கும் பண்பை, ஊழியர்களிடம் ஏற்படுத்த அவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் தர வேண்டியது அவசியம். இதன் மூலம், ஊழியர்களை பொறுப்பானவர்களாக, முழு திறமையை வெளிப்படுத்துபவர்களாக உருவாக்க முடியும்.