சர்க்கரை நோய் இருப்பதை அறியாத 44 லட்சம் இளைஞர்கள்

மருத்துவத் துறையில் இந்தியா பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வந்தாலும் அடைய வேண்டிய இலக்குகள் இன்னும் அதிகமாக உள்ளன. நாடு முழுவதும் மக்களின் உணவு முறை மாறி வருகிறது. பெரும்பாலானோர் காரமான உணவுப் பொருள்களை விரும்பிச்
சாப்பிடுகின்றனர். உணவுப் பழக்க வழக்கத்தில் அக்கறை இல்லாததால் உடல் நலம் தொடர்பான பிரச்னைகளுக்கு அதிகம் செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
 உடல் உழைப்பு குறைந்தது, உடல் பருமன், அதிக கலோரி உள்ள உணவுப் பொருள்களை சாப்பிடுதல் போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. சர்க்கரை நோய் அனைத்து நோய்களுக்கும் நுழைவாயிலாக விளங்குகிறது.
 மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ள புள்ளி விவரங்களின்படி சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களில் 4-இல் 1 பங்கு மக்கள் கிராமத்தில் வசிக்கின்றனர். நாடு முழுவதும் 6.2 கோடி பேரும், தமிழகத்தில் 40.8 லட்சம் பேரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நாட்டில் 44 லட்சம் இளம் வயதினர் சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளாவது குறித்து தெரியாத நிலையில் உள்ளனர். எனவே இது குறித்து விழிப்புணர்வை மேம்படச் செய்வது மருத்துவம் சார்ந்த அனைத்து அமைப்புகளின் கடமையாகும்
 என்றார் அவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...