அண்ணா பல்கலை கவுன்சிலிங் 5,821 பேர் ஆப்சென்ட்!

அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில், கடந்த ஆறு நாட்களில், 5,821 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
அண்ணா பல்கலை பொது கவுன்சிலிங், கடந்த, 1ம் தேதி துவங்கியது. முதல்
நாளில், 2,017 பேர் அழைக்கப்பட்டனர்; 757 பேர் கவுன்சிலிங்குக்கு வரவில்லை. 200க்கு, 200 கட் - ஆப் மதிப்பெண் எடுத்த, 14 பேரும் இதில் அடங்குவர்.

கடந்த ஆறு நாட்களாக நடந்த கவுன்சிலிங்கில், இதுவரை, 22,088 பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். மொத்தம் அழைக்கப்பட்டவர்களில், 5,821 பேர், ஆறு நாட்களில், ஆப்சென்ட் ஆகியுள்ளனர். மேலும், 121 பேர், சீட் கிடைத்தும், அவற்றை திருப்பிக் கொடுத்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...