நாடு முழுவதும், உயர்கல்வி மையங்களில், பாலியல் தொந்தரவு குறித்து, 75 புகார்கள் வந்துள்ளதாக,லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
டில்லியில் 27புகார்
லோக்சபாவில் நேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, எழுத்து மூலம் அளித்த பதில் விவரம்:
நாடு முழுவதும், கடந்த 2014 ஏப்., 1ம் தேதி முதல், 2015 மார்ச் 31 வரை, 84 பல்கலைக் கழகங்களில் பெண் பேராசிரியர்கள்,உதவி ஆசிரியர்கள்,மாணவியர்போன்றோருக்கு, பாலியல் தொந்தரவு தரப்பட்டதாக, 75 புகார்கள் வந்துள்ளன. அதிகபட்சமாக, டில்லியில், 27புகார்கள் தரப்பட்டுள்ளன.
உ.பி.,யில் 23, அரியானாவில் ஏழு,ஒடிசாவில் ஆறு பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். மகாராஷ்டிரா, சத்தீஸ்கர்,திரிபுரா மாநிலங்களில் தலா இருவர் புகார் அளித்தனர்.
ம.பி., ராஜஸ்தான், உத்தரகண்ட், கேரளா,கர்நாடகா, அசாம் ஆகிய மாநிலங்களில்,தலா ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். தவிர, என்.ஐ.டி.,யில் இரு பெண்கள், இந்திரா தேசிய திறந்தவெளி பல்கலையில், தலா ஒரு பெண் பாலியல் புகார் தந்துள்ளனர்.
உத்தரவு
பாலின பாரபட்சங்கள், பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்குமாறு, அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி மையங்களுக்கு, பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இவ்வாறு, அவர் பதிலளித்து உள்ளார்.