பி.எஸ்சி. செவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை 8 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
செவிலியர், இயன்முறை மருத்துவம், ரேடியாலஜி, ரேடியோதெரபி டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி பெர்ஃப்யூஷன் டெக்னாலஜி, ஆப்டோமெட்ரி ஆகிய பிரிவுகளில் பி.எஸ்சி. படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றுக்கான விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ. 350. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் தங்கள் ஜாதிச் சான்றிதழ் நகலை அளித்து, விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அனைத்துப் படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது.
இதுகுறித்து தேர்வுக் குழு அதிகாரிகள் கூறியது:
தமிழகத்திலுள்ள அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
முதல் நாளான திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் 8,316 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.
விண்ணப்பப் படிவம் ஜூலை 17-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 18-ஆம் தேதிக்குள் "செயலாளர், மருத்துவ தேர்வுக் குழு, அரசு மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை- 10' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்