அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 530க்கும் மேற்பட்ட, இன்ஜினியரிங் கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., இடங்களில், நடப்பு ஆண்டில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று வரை, 88 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன.
தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில், 534 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரத்துடன், இந்த கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகள் நடத்தப்படுகின்றன.
விளையாட்டு பிரிவு :
ஒவ்வொரு ஆண்டும், இந்த கல்லூரிகளில் உள்ள, இரண்டு லட்சம் இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை நடத்துகிறது. இந்த ஆண்டு, முதல் கட்டமாக, விளையாட்டுப் பிரிவு மற்றும் மாற்றுத்
திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இம்மாதம் 1ம் தேதி முதல், பொதுப் பிரிவு கவுன்சிலிங் துவங்கியது. 2.05 லட்சம் இடங்களுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. துவக்க நாள் முதலே, கவுன்சிலிங்கில் பங்கேற்கும், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாணவ, மாணவியரை பொறுத்தவரை, பி.இ., - பி.டெக்., படிப்புகளில், தாங்கள் விரும்பிய கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளையே தேர்வு செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், மெக்கானிக்கல் பிரிவு தான், அதிக அளவில், மாணவர்களால் எடுக்கப்படும்.ஆனால், இந்த ஆண்டு, எலக்ட்ரானிக் மற்றும்கம்யூனிகேஷன் - இ.சி.இ., படிப்பை, அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். அடுத்தபடியாக, மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் அறிவியல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சிவில் இன்ஜினியரிங் படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.மாணவியரை பொறுத்தவரை, இ.சி.இ., மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் படிப்புகளை, பெரும்பாலும் தேர்வு செய்துஉள்ளனர்.