கடந்த (2014-15) கல்வியாண்டில் பள்ளி பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத் தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ். அப்துல் ரகீம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என். சுப்பிரமணியன், சமூக நலம், சத்துணவுத் துறை அமைச்சர் பி. வளர்மதி, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள், வனத் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழை முதல் மொழிப் பாடமாகக் கொண்டு தேர்வெழுதி மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த 26 மாணவ, மாணவிகள், மூன்றாம் இடம் பிடித்த 23 பேர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த 51 மாணவ, மாணவிகள், இரண்டாம் இடம் பிடித்த 194 பேர், மூன்றாமிடம் பிடித்த 694 மாணவ, மாணவிகள் என மொத்தம் 988 பேருக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான ஊக்கத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் விழாவில் வழங்கப்பட்டன.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 21 மாணவ, மாணவிகளுக்கு 29-6-2015 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகைகள், பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் ஜெ. ஜெயலலிதா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு உதவி பெறும் காது கேளாதோர் பள்ளியில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து, தமிழக அரசின் ஊக்கத் தொகையைப் பெற்ற மாணவி பிரேமலதாவின் பெற்றோர்
கூறியது:
எனது மகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்ததற்காக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் ரூ. 30 ஆயிரத்துக்கான ஊக்கத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஊக்கத் தொகை, மகளின் உயர் கல்விக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும் என்றனர்.