தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு சீரான கட்டணம் வசூலிக்க ஏதுவாக விதிமுறைகளை திருத்துமாறு மாநில அரசுகள், உச்ச நீதிமன்ற - உயர் நீதிமன்றப் பதிவாளர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து மேற்கண்ட தரப்பினருக்கு, மத்திய பணியாளர் நலத் துறை அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய அரசு, ஆர்டிஐ விதிகளை கடந்த 2012-ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிட்டது. அந்த விதிகளுக்கான வரைவுத் திட்டத்தை தயாரிக்கும்போது, ஆர்டிஐ விதிகளை அரசிதழில் வெளியிட்டுவிட்டால் மாநில அரசுகள் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என வரையறை செய்யப்பட்டது.
அதேவேளையில், முக்கிய சாராம்சத்தைப் பாதிக்காத வகையில் விதிகளில் திருத்தம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. ஏனெனில், ஆர்டிஐ சட்டத்தை நாடு முழுவதிலும் அமல்படுத்துவதில் சீரான நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு கருதியது.
எனவே, மனுக்களுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பான ஆர்டிஐ விதிகளை சீராய்வு செய்யுமாறு அனைத்து மாநில அரசுகள், தீர்ப்பாயங்கள் ஆகியோரை மத்திய அரசு வலியுறுத்துகிறது. அந்தத் திருத்தங்களை அரசிதழிலும் வெளியிட வேண்டும். தேவைப்பட்டால், மத்திய அரசின் விதிகளோடு ஒத்துப்போகும் புதிய விதிகளையும் உருவாக்கிக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தகவல் உரிமைச் சட்டத்தின்படி, மத்திய அமைச்சகங்கள், அரசுத் துறைகளிடம் விண்ணப்பிக்கப்படும் மனுக்களுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேவேளையில், சில மாநிலங்கள் ஆர்டிஐ மனுக்களுக்கு பதிலளிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன.
இதன்படி, ஆர்டிஐ மனுக்களுக்கு ஒளிநகலில் (போட்டோ காப்பி) வழங்கப்படும் பதில்களில் ஒரு பக்கத்துக்கு 2 ரூபாயும், மின்னணு தகடுகளுக்கு (பிளாப்பி) 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.