இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக போலீஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது.சமீபகாலமாக திருட்டு, வழிப்பறி, நகைபறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது
செய்யப்படுகின்றனர். இவர்களில் 18 வயதுக்குட்பட்டோரின் எண்ணிக்கை அதிகம். இந்தாண்டில் இதுவரை 35 இளம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுபவர்கள்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளிக்கு செல்லாமல்
சுற்றித்திரியும் பிள்ளைகளை பெற்றோர் கண்டித்தாலும், அவர்களை கண்காணிப்பதில்லை. ஜாலிக்காகவும், ஆடம்பரமாகவும் இருப்பதற்காக அலைபேசி வழிப்பறி, வீடு, கடைகளில் திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியாகவும், கவலை அளிப்பதாகவும் உள்ளது.
முதன்முறையாக குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள், மீண்டும் ஈடுபடாமல் இருக்க 'கவுன்சிலிங்' தரப்படுகிறது. பெற்றோர் முன்னிலையில் அறிவுறுத்தி எச்சரிக்கப்படுகின்றனர். அதே
சமயம், குற்றத்தை பொறுத்து சிறைக்கு செல்லும்போது, அங்கு பல குற்ற
வாளிகளுடன் தொடர்பு ஏற்படுவதால், ஜாமினில் வெளியே வரும்போது
'கை தேர்ந்த' குற்றவாளிகளாக மாறிவிடுகின்றனர் என்றார்.