ஏழை குடும்பங்களில் பட்டதாரிகள்; கல்லூரியில் இலவச படிப்பு

ஏழை குடும்பங்களில் பட்டதாரிகள் உருவாக, ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக பட்டப்படிப்பு அளிக்க, ஸ்ரீராமபுரம் சேவாஸ்ரமத்தில், தீன சேவா சங்க கல்லுாரி துவங்கப்பட்டுள்ளது.


இலவச சிகிச்சைஸ்ரீராமபுரத்தில், தீன சேவா சங்க பொதுச் செயலர் சீமந்தராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:

பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில், 1930ல், தீன சேவா சங்கம்துவக்கப்பட்டது. அரிஜன ஹாஸ்டலுடன், இலவச ஆயுர்வேத மருத்துவமனை துவக்கப்பட்டு, சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மகாத்மா காந்தி இங்கு வந்து, அரிஜன ஹாஸ்டல் என்பதை, தீன சேவா சங்கம் என்ற பெயரில் துவக்கி வைத்தார்.

அங்குள்ள மில்களில், பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் படிப்பறிவிற்காக, தொழிலாளர்களுக்கு இரவு பள்ளியும், குழந்தைகளுக்கு பகல் பள்ளியும் நடத்தப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பையும், இச்சங்கம் பெற்று உள்ளது.

அமல்படுத்த முடிவுசேவாஸ்ரமம் பள்ளி, தமிழ், கன்னட மொழிகளில், 10ம் வகுப்பு வரை இயங்கி வந்தது. தற்போது, ஸ்ரீராமபுரம் பகுதியிலுள்ள ஏழை எளிய குடும்பத்தினரில், ஒருவர் பட்டப்படிப்பு படித்தவராக உருவாக வேண்டும் என்ற, சங்க கொள்கையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, இங்கு தீன சேவா சங்க - டி.எஸ்.எஸ்., கல்லுாரி துவக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு முதல், பி.ஏ., - பி.காம்., - பி.பி.எம்., பட்டப்படிப்பு கற்பிக்கப்படுகிறது.

ஸ்ரீராமபுரம் தவிர, பெங்களூரு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள், தங்களின் பிள்ளைகளுக்கு பட்டப்படிப்பு வழங்க இயலாதவர்கள், தீன சேவா சங்க கல்லுாரியில் சேர்த்து பயனடையலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...