அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி?

அரசு பொறியியல் கல்லுாரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதுமையான கிரெடிட் மதிப்பீடு முறையினால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.



எதிர் காலத்தை பாதிக்கும் இந்த விதிமுறைகளை உடன் ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரியில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு படிக்கும்போதே, மாணவர்களுக்கு, கேம்பஸ் இண்டர்வியூ மூலம், வேலை கிடைப்பதால், இக்கல்லுாரியில் சேர, ஆண்டு தோறும் கவுன்சிலிங்கில் கடும் போட்டி நிலவுகிறது.

கிரெடிட் முறை:

தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அரசு பொறியியல் கல்லுாரியை நிர்வகிக்க தனி சட்ட திட்டங்கள், பிரத்யேக கிரெடிட் மதிப்பீடுகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதாவது, தியரிக்கு 4 கிரெடிட், புராஜக்டிற்கு (திட்ட அறிக்கை) 8 கிரெடிட், லேப்களுக்கு (ஆய்வகம்) 2 கிரெடிட் மதிப்பீடுகளாக தரப்பட்டுள்ளன.

பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கான நான்காண்டு, பி.டெக்., படிப்பு ஆறு செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்த ஆறு செமஸ்டர்களை சேர்த்து 220 கிரெடிட் வரை மாணவர்கள் எடுக்க வேண்டியிருக்கும்.

பி.டெக்., முதலாமாண்டில் இரண்டு செமஸ்டர்கள் உள்ளன. இந்த இரண்டு செமஸ்டர் தேர்வுகளில் குறைந்தபட்சமாக 30 கிரெடிட்கள் எடுத்தால் தான் இரண்டாமாண்டில் மூன்றாவது செமஸ்டருக்கு நுழைய முடியும். இல்லையெனில், மீண்டும் முதலாம் ஆண்டிலும் படிக்க முடியாது; இரண்டாம் ஆண்டிலும் சேர முடியாது என, கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

கேள்விக்குறி

பொறியியல் கல்லுாரி மாணவர்களின் கல்வி தர மேம்பாட்டிற்கு கடந்தாண்டு கொண்டு வந்த கிரெடிட் முறை, முதலாம் ஆண்டிலேயே மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.30 மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் செல்ல முடியாமல் உள்ளனர். அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அரசு பொறியியல் கல்லுாரியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் தான் சேர்கின்றனர். பிளஸ் 2 வில் இயந்திரத்தனமாக படிக்கும் மாணவர்கள், பொறியியல் கல்லுாரியில் நுழைந்ததும், சற்று ரிலாக்சாக இருந்து விடுகின்றனர்.

இதனால் அவர்களது மதிப்பெண் குறைகிறது. இவர்கள் நன்றாக படிக்க கூடிய மாணவர்கள் என்பதால் மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக சாதிப்பர். ஆனால் வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் முதலாம் ஆண்டிலேயே வீட்டிற்கு அனுப்புவது சரியான கல்வி மதிப்பீடாக இருக்க முடியாது.

நம்பிக்கை இழப்பு: தவிர, மாணவர்களை வீட்டில் இருந்தே கிரெடிட் மதிப்பெண் எடுக்க வைப்பது, அவர்களது தன்னம்பிக்கை சிதைக்க செய்து வாழ்வினை புரட்டி போடும் அபாயம் உள்ளது.

ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு, பிராந்திய இட ஒதுக்கீடு காரணமாக சுமாராக படித்த மாணவர்களுக்கும் அரசு பொறியியல் கல்லுாரியில் இடம் கிடைக்கிறது.இந்த மாணவர்கள் படிப்படியாக தங்களது கல்வி அறிவை வளர்த்து கொள்கின்றனர். இந்த கிரெடிட் முறையினால் இவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயம் உள்ளது.

ரத்து செய்ய வலியுறுத்தல்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் தேர்வு எழுதும் மீதமுள்ள 17 கல்லுாரிகளில் இந்த நடைமுறை இல்லை. புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரியில் மட்டுமே இந்த விதிமுறை உள்ளது.

பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அரசு பொறியியல் கல்லுாரியை குறி வைத்துள்ளனர். இந்த வினோத விதிமுறையினால் அரசு பொறியியல் கல்லுாரியை தவிர்த்து இந்தாண்டு தனியார் பொறியியல் கல்லுாரி பக்கம் சாயும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த விதிமுறைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...