செவிலியர் பட்டயப் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம்

செவிலியர் பட்டயப் படிப்புக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
 தமிழகத்தில் செவிலியர் பட்டயப்படிப்புகளை வழங்கி வரும் 23 அரசு கல்லூரிகளில் மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 2,100 இடங்கள் உள்ளன.
 ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
 தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 9 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் நேரடி விண்ணப்ப விநியோகம் நடைபெறும். இதுதவிர தமிழக அரசின் www.tn.gov.in , www.tnhelath.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 250 ஆகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழின் இரண்டு நகல்களைச் சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...