ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு தேதி முடிவு செய்யப்படவில்லை ;விரைவில் தேதி அறிவிப்பு!!! கல்வித்துறை அதிகாரி

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு
நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டது. அதில், ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
 இந்த நிலையில், வருகிற 29-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த உத்தேச அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.
 இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இந்தக் கால அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
 அரசிடம் அனுமதி பெற்ற பிறகு, விரைவில் அதிகாரப்பூர்வ கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும்
 என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...