தனியார் பள்ளிகளுக்கு ஆதரவு அரசு மீது கல்வி வல்லுனர் புகார்!கர்நாடகாவிலும் இதே நிலை தான்

: அரசு பள்ளிகளின் அபிவிருத்திக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசு, தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது, என, கல்வி வல்லுனர் நிரஞ்சன் ஆராத்யா குற்றம் சாட்டினார்.



பெங்களூருவில், நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது

அரசு பள்ளிகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, அரசால் முடியவில்லை. கடந்த ஆண்டு, அரசு பள்ளி அபிவிருத்திக்காக, 47.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

ஆனால், அபிவிருத்தி அடையவில்லை. பெரும்பாலான பெற்றோர், தங்களின் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில், ஆர்வம் காட்டுகின்றனர்.


மக்கள் பிரதிநிதிகளும், அரசு பள்ளி முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாமல், தனியார் பள்ளி அபிவிருத்திக்கு மறைமுகமாக ஆதரவளிக்கின்றனர். பெரும்பாலான அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றனர். இங்கு, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் குழந்தைகளிடம் இருந்தும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசியல்வாதிகளே, பல கல்வி நிறுவனங்களை நடத்துவதால், சட்டசபையிலும், விவாதிக்கப்படுவதில்லை.

கல்வித்துறை அபிவிருத்திக்கு கூடுதல் நிதியுதவி ஒதுக்க வேண்டும்.இவ்வாறு, நிரஞ்சன் ஆராத்யா கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...