குழந்தைகள் குறித்த யுனிசெஃப் அறிக்கை: ஆராய குழு அமைப்பு

இந்தியாவில் குழந்தைகளின் நிலை குறித்த யுனிசெஃப் அறிக்கையை ஆய்வு செய்ய குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

 இந்தியாவில் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையிலான நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் கணிசமாக குறைந்து வருவதாக யுனிசெஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஆனால், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை மூலம் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுக்கும், யுனிசெஃப் அறிக்கைக்கும் இடையே பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன.
 எனவே, அந்த அறிக்கை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மத்திய சுகாதாரத் துறை, புள்ளியில் துறை ஆகிய அமைச்சகங்களின் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
 இதுதொடர்பாக இந்தக் குழுவினர் ஒரு வாரத்துக்குள் ஆய்வறிக்கை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 குழந்தைகள் நலன் குறித்த கணக்கெடுப்பைப் பொறுத்தவரை வயதுக்கேற்ற உயரம், எடை மற்றும் வயது, உயரத்துக்கேற்ற எடை ஆகிய மூன்று விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
 ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பை ஒப்பிடுகையில், தற்போதைய யுனிசெஃப் அறிக்கையில் மேற்கண்ட பிரிவுகளில் குழந்தைகளின் ஆரோக்கியம் 6 முதல் 12 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார். முன்னதாக, குழந்தைகள் நலன் குறித்த யுனிசெஃப் அறிக்கையை மத்திய அரசு மறைப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...