ஹெல்மெட் வழக்குப் பதிவதில் போலீஸ் ஜரூர்! லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம் பறிமுதல்

ஐகோர்ட் உத்தரவுபடி கடலூர் மாவட்டத்தில் நேற்று கட்டாய ஹெல்மெட் அமலுக்கு வந்தது. கடலூரில் நேற்று ஹெல்மெட் போடாமல் சென்ற 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதையொட்டி சென்னை ஐகோர்ட்டில் இது தொடர்பான வழக்கு ஒன்றியில் நீதிபதி கடந்த 8ம் தேதி இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.இந்த உத்தரவு வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறியிருந்தார். அதன்படி இருசக்கர வாகனம் ஓட்டுவோர், பின்னால் உட்கார்ந்து செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாட்கள் நெருங்க நெருங்க ஹெல்மெட் வாங்குவதில் பொது மக்கள் முனைப்பு காட்டினர்.

இதனால், ஹெல்மெட் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தரமான ஹெல்மெட் கிடைக்காமல் பலர் திண்டாடினர். அவசர அவசரமாக சென்னையில் இருந்து ஹெல்மெட் வரவழைக்கப்பட்டு வியாபாரிகள் விற்பனை செய்தனர். நேற்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்தபடி சென்றனர்.

ஆர்.டி.ஓ., ஆய்வு : வட்டார போக்குவரத்து அதிகாரி அங்கமுத்து தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், நல்லதம்பி, சுந்தர்ராஜ் ஆகியோர் நேற்று கோ ஆப் டெக்ஸ் அருகே தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் லைசன்ஸ், ஆர்.சி., புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது.இதேப்போன்று விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, கடலூர் ஆகிய இடங்களில் ஹெல்மெட் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

ஹெல்மெட் மற்றும் வாங்கிய ரசீது காண்பித்த உடன் பறிமுதல் செய்யப்பட்ட பதிவேடுகள் திருப்பிக் கொடுக்கப்படும். அதனால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதில்லை.போலீசார் வழக்குப்பதிவுஅதேப்போல கடலூரில் புதுநகர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாரும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.புதுநகர் காவல் நிலையம் அருகே போலீசார் சோதனையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...