எம்.பி.,க்களின் சம்பளத்தை இருமடங்காக உயர்த்த பரிந்துரை( இடைநிலை ஆசிரியர்களுக்கு !!! )

எம்.பி.,க்களின் சம்பளத்தை இருமடங்காக உயர்த்த பார்லி., குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான சம்பள கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் பார்லி., உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என
பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், எம்.பி.களின் ஓய்வூதியத்தை 75 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பார்லி., கேன்டீனில் எம்.பி.,க்களுக்க மானிய விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருவது சர்ச்சையாக்கப்பட்டுள்ள நிலையில், எம்.பி.,க்களின் சம்பளத்தை இருமடங்காக்க பார்லி., பரிந்துரைத்துள்ளது புதிய பூகம்பத்தை கிளப்பி உள்ளது. பார்லி., வட்டார தகவல்களின்படி, பார்லி., 60 கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாம். அதில் முக்கிய கோரிக்கையாக 2010ம் ஆண்டிற்கு பின் எம்.பி.,க்களின் சம்பளத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டி, அரசு ஊழியர்களைப் போல் அவர்களுக்கு அகவிலைப்படி ஏதும் கொடுக்கப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

தற்போது எம்.பி.,க்களின் மாத சம்பளம் ரூ.50,000 ஆக உள்ளது. இதனை உயர்த்துவதுடன், தினப்படியாக ரூ.2000 வழங்க வேண்டும் என பார்லி., குழு கேட்டுக் கொண்டுள்ளதாம். பார்லி., கூட்டத் தொடர் நடக்கும் காலங்களில் தினப்படியை மேலும் உயர்த்தி தரவும் கேட்கப்பட்டுள்ளதாம். பா.ஜ., எம்.பி., யோகி ஆதித்யானந்த் தலைமையிலான பார்லி., குழு, ஓய்வுபெற்ற எம்.பி.,க்களின் ஆண்டு உள்நாட்டு இலவச விமான பயணங்களின் எண்ணிக்கையையும் 20 முதல் 25 ஆக உயர்த்தவும், மாத ஓய்வூதியத்தை ரூ.20,000லிருந்து ரூ.35,000 ஆக உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளது.

தற்போது எம்.பி.,க்களுக்கு தனியார் பாதுகாப்புடனான கூடுதலாக இலவச ஏ.சி., வசதியுடனான முதல் வகுப்பு ரயில் பயணத்தை வழங்க வேண்டும். விமான நிலையங்களில் எம்.பி.,க்கள் ஓய்வு எடுப்பதற்கு சிறப்பு வசதிகள் செய்து தர வேண்டும். எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழான மருத்துவ பயன்கள் அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...