புதிய இணையதளம் தொடங்கியது கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிய இணையதளம்
(www.kovaischools.net) தொடங்கப்பட்டுள்ளது.
 தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்கள், மாணவர்கள் - ஆசிரியர்களுக்கான நலத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய இணையதளம் (https:tnschools.gov.in) செயல்பட்டு வருகிறது.
 இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள், மின்னஞ்சல் முகவரி, கல்வி அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய புதிய இணையதளத்தை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளத்தை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
 இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் என்.அருள்முருகன் கூறியதாவது:
 கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய வருவாய் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்குத் தேவையான கையேடுகள், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மாதிரி விடைத் தாள்கள், பாடத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்படும்.
 மேலும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகளுக்குத் தேவையான விவரங்கள், பணி வரன்முறை விவரங்கள், தேவையான விண்ணப்பப் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேவைப்படும் படிவங்களை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
 அதேபோல, கல்லூரிக் கல்வி பயில விரும்பும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டி விவரங்கள், கோவை மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் தகவல்கள், கல்வியுடன் தொடர்புடைய பிற துறைகளின் இணையதளங்களுக்கான இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
 இந்த புதிய இணையதளம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உதவியாக இருப்பதுடன் கல்வித் துறை அதிகாரிகளை பள்ளிகளுடன் இணைக்கும் பாலமாகவும் இருக்கும் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...