திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமல்ல, அது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ராஜு என்பவரின் 2-ஆவது மனைவி தவமணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
மனுவில் தவமணி கூறியது:
எனது கணவர் ராஜு மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் வருவாய்க் கண்காணிப்பாளராக பணியாற்றி 2000-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவருக்கு நான் 2-ஆவது மனைவி. முதல் மனைவி இறந்த பிறகு என்னை ராஜு திருமணம் செய்தார்.
எனது கணவர் இறந்ததையடுத்து எனக்கு குடும்ப ஓய்வூதியம் கோரி மின் வாரியத்திடம் விண்ணப்பித்தேன். அதை கண்காணிப்புப் பொறியாளர் ஓய்வூதியத் துறைக்கு பரிந்துரைத்தார். ஆனால் ஓய்வூதியத் தணிக்கை அதிகாரி எனது கோரிக்கையை நிராகரித்து விட்டார். எனது திருமணம் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியான பிழைகளைக் கூறி ஓய்வூதியம் அளிக்க மறுப்பது தவறு. இந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரரின் திருமணம் 1977-இல் நடந்துள்ளது. திருமண அழைப்பிதழ் ஆதாரமாக உள்ளது. அப்போது திருமணப் பதிவு கட்டாயமாக்கப்படவில்லை. மேலும் மனுதாரருக்கு ராஜுவுடன் திருமணம் ஆகியுள்ளது என்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. மேலும் அவருக்குப் போட்டியாக வேறு யாரும் ஓய்வூதியம் கோரவும் இல்லை.
இந்தச் சூழலில் மனுதாரருக்கு திருமணம் நடந்ததற்கான சான்று அளிக்கவில்லை என்ற ஒரே காரணத்தைக் கூறி அவருக்கு குடும்ப ஓய்வூதியத்தை மறுத்துள்ளதை ஏற்க முடியாது. தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டத்தின் 3- ஆவது பிரிவு திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. அதே சட்டத்தின் 23-ஆவது பிரிவில் திருமணத்தை பதிவு செய்யவில்லை என்பதற்காக அதை செல்லாது என்று கூற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே திருமணத்தைப் பதிவு செய்வது என்பது சம்பந்தப்பட்டவர்களின் விருப்பத்தைப் பொருத்தது. இந்து திருமண சட்டப் பிரிவு 8-இல் திருமணத்தைப் பதிவு செய்வது என்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. அது கட்டாயம் அல்ல என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்ற காரணத்தைக் கூறி ஒருவருடைய உரிமையைப் பறிக்க முடியாது.
பதிவு செய்யாத திருமணம் செல்லாது என்று முடிவு செய்தால் திருமண முறையில் பெரும் குழப்பம் ஏற்பட்டு விடும். மேலும் பதிவு செய்யாத திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் சிக்கலாகி விடும். எனவே மனுதாரரை திருமணச் சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்துவதை ஏற்க முடியாது. மனுதாரரின் திருமணம் தொடர்பான ஆவணங்களைப் பரிசீலித்து அவருக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார்.