டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், பணி நியமனம் மற்றும் துறைகள் குறித்த பட்டியல்வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், பணி நியமனம் மற்றும் துறைகள் குறித்த பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தமிழக அரசு துறைகளிலுள்ள பல்வேறு
பதவிகளுக்கு, பணி நியமனத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் - 1,1ஏ, 2, குரூப் - 4 என, குரூப் - 8 வரையிலான, படிநிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.


இந்தப் பதவிகள் என்ன; தேர்வுகள் நடக்கும் முறை என்ன; தங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பது குறித்து, விண்ணப்பதாரர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யை அணுகிய வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் மற்றும் பட்டதாரிகளின், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், பதவிகள், துறைகள் மற்றும் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்த விவரங்களை, http://www.tnpsc.gov.in/recruitment-faq.pdf என்ற இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...