விதிமுறை மீறி அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. பெரம்பலுாரில் சமீபத்தில் தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்ததில் 31 மாணவர்கள் காயமடைந்தனர். முறையாக பராமரிக்காமல் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச் செல்வதுதான் இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.
இதனிடையே விதிமுறை மீறி அதிக மாணவர்களை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்களை கண்காணித்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை
உத்தரவிட்டுள்ளது.
வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர்கூறுகையில்,“ வாகனங்களை முறையாக பராமரித்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் அது மீறப்படுவதால் விபத்து ஏற்படுகிறது. பெரம்பலுார் சம்பவத்திற்குப்பின் துறை உயரதிகாரிகள் உத்தரவுப்படி அதுபோன்ற வாகனங்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க காலை,மாலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது,”என்றார்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...