தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு தொடங்கப்படும் என்று, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில், சேலம் மண்டல அளவிலான அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஓமலூர் அருகேயுள்ள பத்மவாணி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பி.எட். படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள், அதற்கான தகுதிகள்,
விண்ணப்பிக்கும் முறை, ஆராய்ச்சிப் படிப்பில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 10 புதிய துறைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 170 மாணவ, மாணவியர்கள் முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அடுத்த கல்வியாண்டு முதல் எம்.எட்., ஒருங்கிணைந்த பி.எட். பட்டப்படிப்பு தொடங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பட்டயப் படிப்புகளையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பி.எட். படிப்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக பி.ஏ.பி.எட், பி.எஸ்சி. பிஎட் பயில முடியும். தற்போது தமிழ்நாடு முழுவதும் பி.எட். பட்டப் படிப்பில் 70 ஆயிரம் மாணவர்களும், எம்.எட். படிப்பில் 4 ஆயிரம் மாணவர்களும் பயின்று வருகின்றனர் என்றார்.
நிகழ் கல்வியாண்டு முதல் பி.எட். பட்டப் படிப்பிற்கான கால அளவை இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப் போவதாக வெளியான தகவல் குறித்து கேட்டதற்கு, அதுகுறித்து தனியார் கல்லூரிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் அளிக்கும் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, பி.எட் பட்டப்படிப்பிற்கான கால அளவு அறிவிக்கப்படும் என்றார்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...