இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை!

கோவை மாவட்டத்தில் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்டஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை ஏற்பட்டது. நடப்பு கல்வியாண்டிற்கான, பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் 12முதல் ௨௯ம் தேதி வரை நடக்கின்றன. இதற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்றுஇறுதி நாள். இந்நிலையில், கோவை உட்பட பிற மாவட்டங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால், கொந்தளிப்பை
உருவாக்கியுள்ளது.கலந்தாய்வில் பங்கேற்க சம்பந்தப்பட்ட ஆசிரியர் அந்த பள்ளியில் குறைந்தபட்சம், மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு, 2012 ஜூன் முதல் தேதி, தகுதி நாளாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, குறைந்தபட்சம் ஒரு கல்வியாண்டு போதும் என நிபந்தனை தளர்த்தப்பட்டது. புதிய விதிமுறைப்படி, 2014 ஜூன் முதல் தேதிதகுதி நாளாக அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கடந்தாண்டு, ஜூலை 23ம் தேதி தான்ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. ஓராண்டுகளாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருந்தாலும், இரண்டு ஆண்டுகள் பணி புரிந்துள்ளவர்கள் மட்டுமே, இக்கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...