2014ல், கணினி வல்லுனர்களுக்கு வழங்கிய 'எச்-1பி' விசாவில், 86
சதவீதத்தை இந்தியர்கள் பெற்று, முதலிடம் பிடித்துள்ளனர்.இரண்டாவது இடத்தில் உள்ள சீனா, ஐந்து சதவீத விசாக்களைப் பெற்றுள்ளது. இதர நாடுகள், ஒரு சதவீதத்திற்கும்
குறைவான பங்களிப்பைக் கொண்டுள்ளன. சென்ற ஆண்டு, அமெரிக்கா, மொத்தம், 76ஆயிரம் 'எச்-1பி' விசாக்களை வழங்கியுள்ளது. இன்போசிஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்ற இந்திய நிறுவனங்களின் பணியாளர்களுக்கு, அதிக அளவில் விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனங்கள், தங்கள் பணியாளர்கள் மூலம், அமெரிக்க நிறுவனங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில், பணிகளை முடித்து தருகின்றன. அமெரிக்க நிறுவனங்கள், அனுபவம் உள்ள உள்நாட்டு கணினி வல்லுனர்களுக்கு அதிக ஊதியம் வழங்குவதை தவிர்க்க, குறைந்த ஊதியத்தில், 'எச்-1பி' விசா மூலம், இந்தியர்களை வரவழைத்து, பணிகளை முடித்துக் கொள்கின்றன.கணினி துறை மட்டுமின்றி, இதர பொறியியல் துறைக்கான, 'எச்-1பி' விசா பிரிவிலும், இந்தியர்கள், 47 சதவீதத்தைப் பெற்று, முதலிடம் வகிக்கின்றனர். சீனா, 19.5 சதவீத விசாக்களைப் பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளது.
மின்சாரம், வாகனம், சிவில், ரசாயனம், விமானம் மற்றும் இதர சிறப்பு பொறியியல் பிரிவுகளின் கீழ், சென்ற ஆண்டு, 8,103 இந்தியர்களுக்கு, 'எச்-1பி' விசா வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள், 'எச்-1பி' விசாவை, தவறாக பயன்படுத்தி, உள்நாட்டினரின் வேலைவாய்ப்பை பறிப்பதாக, அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால்,
அமெரிக்காவில் உள்ள அன்னிய நிறுவனங்கள், உள்நாட்டினரைத் தான் பணிக்கு அமர்த்த வேண்டும் என்ற சட்டம் இல்லை என, சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.