ஆக.24-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

தமிழக சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் 24-ம் தேதி (ஆகஸ்ட் 24)தொடங்கும் என சட்டப் பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்
குறிப்பில்,
"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை ஆகஸ்ட் திங்கள் 24-ஆம் நாள் திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப் பேரவை கடைசியாக பட்ஜெட் கூட்டத் தொடருக்காக கடந்த மார்ச் 25-ம்தேதி கூடியது. அதன் பிறகு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.


ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றதும் உடனடியாக சட்டப் பேரவை கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அவ்வாறு கூட்டப்படவில்லை. இந்நிலையில், வரும் 24-ம் தேதி (ஆகஸ்ட் 24) தமிழக சட்டப் பேரவை கூடும் என சட்டப் பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் முழு மதுவிலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பரபரப்பான நிலையில், சட்டப்பேரவையில் மதுவிலக்கு பிரச்சினை எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...