குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள்-உதவியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக்கு, ரூ.3.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சமூக நலன்-சத்துணவுத் திட்டத் துறை செயலர் பி.சிவசங்கரன் அண்மையில் வெளியிட்ட உத்தரவு:
சத்துணவுத் திட்டத் துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், 21 ஆயிரத்து 920 அங்கன்வாடி பணியாளர்களும், 24 ஆயிரத்து 250 அங்கன்வாடி உதவியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு, புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், 5 மாவட்டங்களில் உள்ள மண்டல பயிற்சி மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளும் வலுப்படுத்தப்படும். இந்தப் பணிகளுக்கென ரூ.3 கோடியே 31 லட்சத்து ஒரு ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது, மத்திய-மாநில அரசுகளின் பங்காகும். 90 சதவீத நிதியை மத்திய அரசும், 10 சதவீதத்தை மாநில அரசும் அளிக்கிறது என தனது உத்தரவில் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.