மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய 3 ஆட்சியர்களுக்கு அரசு விருதுகள்

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணியாற்றிய 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு விருதுகளை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, சுதந்திர தின விழாவின் போது வெளியிடப்பட்டது. அதன்விவரம்:

டி.பி.ராஜேஷ்: கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார். அவர் மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு பாராட்டத்தக்கது. வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, 252 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

மேலும், 3 ஆயிரத்து 413 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உதவிகளும், 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் நடத்துவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 289 மாற்றுத்திறனாளி குழந்தைகளை சாதாரணப் பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிராமப்புறங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. பல்வேறு நலத் திட்டங்களின் மூலம், 23 ஆயிரத்து 239 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் புரிந்துள்ளார்.

எம்.ரவிக்குமார்: கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக உள்ளார். பிற துறைகளை ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நலத் திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்.

32 ஆயிரத்து 972 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31.36 கோடி அளவிலான நலத் திட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறப்புப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டி உதவிகள் வழங்கியுள்ளார்.

இல.சுப்பிரமணியன்: கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை முதல் மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார். மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மருத்துவ உதவிகள், பொருளாதார உதவிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். தேசிய அறக்கட்டளைத் திட்டத்தின்கீழ், 2 ஆயிரத்து 37 மனவளர்ச்சி குன்றிய, பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்குப் பாதுகாவலர் சான்று அளித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவரம் முகாம் மூலம் திருமணங்களை நடத்தியுள்ளார். பல்வேறு நலத் திட்டங்களின் மூலமாக, 35 ஆயிரத்து 523 மாற்றுத்திறனாளிகள் பலன் அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளை மதுரை மாவட்டத்தில் நடத்தியுள்ளார்.

இந்த மூன்று மாவட்ட ஆட்சியர்களின் பணியைப் பாராட்டி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கான தமிழக அரசு விருது வழங்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...