பணிபுரியும் ஆதிதிராவிடர், பழங்குடியின பெண்களுக்காக 5 மாவட்டங்களில் தங்கும் விடுதிகள் அமைக்க முடிவு: ரூ. 4.40 கோடி அரசு ஒதுக்கீடு

பணிபுரியும் ஆதிதிராவிடர், பழங்குடியின பெண்களுக்காக ரூ. 4.40 கோடியில் 5 மாவட்டங்களில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

ஆதிதிராவிடர், பழங்குடி இன பெண்கள் தங்களின் சொந்த ஊர், குடும்பங்களையும் விட்டு வேறு மாவட்டங்களுக்குச் சென்று தங்கி பணிபுரியும் நிலை ஏற்படுகிறது. எனவே, அவர்கள் பாதுகாப்பாகத் தங்கி பணிபுரிய மகளிர் விடுதிகள் தொடங்குவது அவசியமாகிறது. அதன்படி முதல்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ரூ. 4.40 கோடியில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் தொடங்கப்படும்.

நடப்பாண்டில் 160 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள், 100 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு ரூ. 12.20 கோடியில் 260 நீராவி கொதிகலன்கள் வழங்கப்படும். 1,314 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 98,039 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.46 கோடியில் எவர்சில்வர் தட்டு, டம்ளர்கள் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடி யினருக்கான 5 உண்டி உறைவிடப் பள்ளிகள் ரூ. 2.54 கோடியில் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 15 உண்டி உறைவிடப் பள்ளி கள் ரூ. 2.40 கோடியில் நடு நிலைப் பள்ளிகளாகவும் மேம் படுத்தப்படும்.

சேலம் மாவட்டம் அபினவம், விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமலை ஆகிய இடங்களில் தற்போது 2 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதேபோல நீலகிரி மாவட்டத்திலும் உள்ள 32,813 பழங்குடியினர் பயன்பெறும் வகையில் உதகமண்டலத்தில் உள்ள முத்தோரை பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மைய வளாகத்தில் ரூ. 2 கோடியில் மாதிரி உண்டி உறைவிடப் பள்ளி தொடங்கப்படும். 26 பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில் தலா ஒரு அறிவுத் திறன் வகுப்பறை ஏற்படுத்தப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெற இத்தகைய அறிவிப்புகள் வழிவகுக்கும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...