இளைஞர் காவல் படையினரை, காவல் துறை பணியில் நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வை உள்துறை வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா அண்மையில் வெளியிட்டார். அதன் விவரம்:
தமிழக காவல் துறைக்கு
உறுதுணையாக விளங்க, இளைஞர் காவல் படையினர் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012- ஆம் ஆண்டு அறிவித்தார். மேலும், இளைஞர் காவல் படையில் ஓராண்டு பணியை முடிப்போர் காவல் துறையில் காவலர் நிலையில் பணி நியமனம் செய்யப்படுவர் எனவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, 10 ஆயிரத்து 500 இளைஞர் காவல் படையினரை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், 10 ஆயிரத்து 99 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரத்து 99 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை, காவல் துறை விசாரணை ஆகியன மேற்கொள்ளப்பட்டன. அதில், 8 ஆயிரத்து 500 பேர் தங்களது ஓராண்டு பணியை கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடித்துள்ளனர். அவர்களை தமிழக காவல் துறையின் பணியில் காவலர்களாக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான பரிந்துரைகளைக் காவல் துறை இயக்குநர் அரசுக்கு அனுப்பியுள்ளார்.
அதன்படி, மாநில அளவிலான பொது எழுத்துத் தேர்வை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தி, காவலர்களைத் தேர்வு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். இந்தத் தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். பொது அறிவுப் பகுதியில் இருந்து 60 மதிப்பெண்களுக்கும், காவல் துறை தொடர்பாக 40 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35 ஆகும் என தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளார்.
இந்தப் பரிந்துரைகளைக் கவனமுடன் பரிசீலித்த தமிழக அரசு, அவற்றை ஏற்றுக் கொண்டு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, இளைஞர் காவல் படையில் உள்ளவர்களை, தமிழக காவல் துறையில் காவலர்களாக நியமிக்க எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது.