அகில இந்திய அளவில் தேசிய தொழில் நுட்பக்கழகம் (என். ஐ.டி.,) சிறந்த கல்வி வழங்குவதில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது என, இயக்குனர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்:
தேசிய தொழில் நுட்க கழகத்தில், 11 வது பட்டமளிப்பு விழா நாளை (இன்று) நடக்கிறது. இதில், 1,642 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. இந்த வருடம் அனைத்து இளங்கலை பொறியியல் துறைகளில் குடியரசு தலைவர் விருதை, உலோகம் மற்றும் மூலப்பொருளியல் துறையை சேர்ந்த அபூர்வசரத் பெறுகிறார்.
அகில இந்திய அளவில் என்.ஐ.டி., சிறந்த கல்வி வழங்குவதில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது. வேலை வாய்ப்பில் பழமை இந்திய தொழில் நுட்பக் கழகங்களில் என்.ஐ.டி., முன்னணியில் உள்ளது. என்.ஐ. டி.,யில் கல்வி பயின்றவர்கள், நடப்பாண்டு அதிகப்பட்சமாக வருடம், 34 லட்ச ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். நடப்பு கல்வியாண்டில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தொலைதூர காட்சியின் மூலம் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, இருமுறை பேசியுள்ளார்.
அவரது பேச்சு ஆசிரியர், மாணவர்களை ஊக்கு விப்பதாக அமைந்தது. மாணவர்களின் நலனுக்காக கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில், எண்ணங்கள் பாதிக்காத வகையில், பாடத்திட்டங்கள் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம், 28 ம் தேதி கல்வித்துறையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற, சிறந்த பேராசிரியர்களை கொண்டு பாடத் திட்டங்கள் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.