கலாம் கனவு நிறைவேறுமா; இந்திய வளர்ச்சிக்கு தேவை எது?

தேசத்தின் வளர்ச்சியை நேசித்த இவர், இளைஞர்கள் மத்தியில் நாட்டுப்பற்று எனும் விதையை ஆழமாக விதைத்தார்.  இது வேரூன்றி வளரத் துவங்கி விட்டால், இந்தியா மிக விரைவில் வல்லரசாக உருவெடுக்கும்.

இந்தியா வல்லரசு நாடாக மாறுவதற்கான யோசனைகளை தான் எழுதிய  இந்தியா 2020 புத்தகத்தில் கலாம் எழுதியுள்ளார். அதில், வல்லரசாகவும், முன்னேறிய நாடாகவும் இந்தியா மாறுவதற்கு வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், மருத்துவம் மற்றும் ஆரோக்கியம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், அடிப்படை கட்டமைப்பு, தடையற்ற மின்சாரம், சீரான சாலை போக்குவரத்து, உயர்தொழில்நுட்பத்தில் தன்னிறைவு ஆகிய துறைகளில் வளர்ச்சியடைய வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.
அவரது கனவு நனவாக வேண்டுமெனில், அவர் கூறிய துறைகளில் நாடு முன்னேற வேண்டும். இத்துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் நம் நாடு முன்னேறியுள்ளது. இருப்பினும் இந்தியா தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டிய துறை அடிப்படை கட்டமைப்பு தான். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அந்த நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதியின் முன்னேற்றத்தை பொறுத்தே அமைகிறது. அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகள், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இத்துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டும்.
அடிப்படை கட்டமைப்பு என்பது சாலை, ரயில், விமானம், துறைமுகம், அணைகள், மின்சாரம், பாசனம், தொலைத்தொடர்பு, குடிநீர், துப்புரவு மேலாண்மை, உள்நாட்டு நீர்வழிகள் ஆகியவை உள்ளடக்கியது. தற்போதைய அரசு அதற்கான பாதையில் செல்ல வேண்டும். அரசு மட்டுமே இந்த துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தி விட முடியாது. தனியார் பங்களிப்பும் முக்கியம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...