ஆங்கில பயிற்சி, தலைமை பண்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பயிற்சிகளுக்காக, சென்னை மாநகராட்சி, பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து மாநகராட்சியின் 70 பள்ளிகளில், புதுமை பள்ளி திட்டத்தை துவக்கியுள்ளன.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 70 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளன. அவற்றில், 14 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பொதுத்தேர்வில் சாதிக்க, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, 70 பள்ளிகளிலும், புதுமை பள்ளி திட்டம் என்ற புதிய திட்டத்தை, சென்னை மாநகராட்சி நேற்று துவங்கியது. பிரிட்டிஷ் கவுன்சில், மெக்ஆர்தர் பவுண்டேஷன் ஆகியவை மாநகராட்சியுடன் இணைந்து, மூன்று ஆண்டுகளுக்கு இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளன.
இதன்படி, மாணவ, மாணவியருக்கு ஆங்கிலம், தலைமை பண்பு, தகவல் தொடர்பு திறன் மேம்பாடு ஆகியவை குறித்து, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் 140 ஆசிரியர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ், ஆங்கிலம் பயிற்றுவிக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கும், தலைமை பண்பு பயிற்சியை, இந்த அமைப்பினர் அளிக்க உள்ளனர் என, கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.