மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கற்பித்தல் விருதுக்கு, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அன்பழகன், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர், அடுத்த மாதம், 5ம் தேதி, ஜனாதிபதியிடம் விருது பெறுகிறார்.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு, 2010 முதல் ஆண்டுதோறும், தகவல் தொழில்நுட்ப கற்பித்தல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை, தமிழகத்தில் இதுவரை, ஐந்து ஆசிரியர்கள்
பெற்றுள்ளனர்.கடந்த, 2014 - 15ம் ஆண்டிற்கான விருதுக்கு, தமிழகம், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, உத்தரகண்ட், அரியானா, ம.பி., மற்றும் டில்லி மாநிலங்களின், ஒன்பது ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.
தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் அன்பழகன், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தினமான, அடுத்த மாதம், 5ம் தேதி, டில்லியில், ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கப்படும்.
எளிய பொருட்கள் மூலம் அறிவியல் மாதிரிகளை எவ்வாறு செய்வது என்ற செயல் முறையை, மற்ற மாவட்ட மாணவர்களுக்கு, 'ஆன்-லைனில்' செய்து காட்டியதற்காக விருது வழங்கப்படுகிறது.ஆசிரியர் அன்பழகன், ஏற்கனவே மாநில அளவிலும், தேசிய அளவிலும், 'மைக்ரோசாப்ட் நிறுவன விருதையும் பெற்றுள்ளார். 2013ல், ஜப்பானில் நடந்த, கணித பாடத்திட்ட வடிவமைப்பு பயிற்சி முகாமில் பங்கேற்று, பயிற்சி பெற்றுள்ளார்SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...