அரசாணை எண் 177 நாள் 11. 11. 2011 ன்படி 6முதல் 8 வகுப்புகளுக்கு பகுதி நேர தொழில் ஆசிரியர்கள் 16549 பேர் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி
வருகின்றனர். இவர்கள் நடுநிலைப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் தற்காலிக
பணியாளர்களாக உள்ளனர்.
தனியார் பள்ளி மோகம் அரசு பள்ளியை பாதிக்கும் அடுத்த நிகழ்வாக 6-8 வகுப்பில் 100க்கு குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பணியாற்றிய பகுதி நேர தொழில் ஆசிரியர்கள் இன்றைய தினம் அதிரடி மாறுதல் மூலம் வேறு பள்ளிகளில் பணியாற்ற சார்ந்த முதன்மை கல்வி அலுவலரால் உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாதம் ₹7000 ஊதியம் பெற்றுக்கொண்டு வேறு தொழிலும் செய்ய இயலாது சிரமப்பட்டு வந்த இவர்கள் தற்போது பணி நிரவல் மூலம் வெகு தொலைவுக்கு பணி மாறுதல் செய்வதால் கலக்கமடைந்துள்ளனர்.
நடுநிலைப்பள்ளிப்பள்ளிகளில் 20 க்கு குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் /உயர் நிலை பள்ளிகளில் 100க்கு குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஒரே பாடத்திற்கு பல பட்டதாரி ஆசிரியர் பணியில் இருக்கும் சூழ்நிலையில் அவர்களை பாட ஆசிரியர் வேண்டும் என்ற நிலையில் உபரி மாறுதல் செய்ய வில்லை. அவர்களைப் போல எங்கள் பாடமும் (தொழில் கல்வி )
தனித்துவம் வாய்ந்தது.
பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை. நாங்கள் மட்டுமே பந்தாடப்படுகிறோம் என்று குமுறுகின்றனர்.