மாணவர் விடுதிகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்து, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவுறுத்தியது.
இதுதொடர்பாக அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் முதல்வர்கள், அண்ணா பல்கலைக்கழக டீன், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கல்லூரி மாணவர் விடுதிகள், மேல்நிலை நீர்த் தொட்டிகள், கழிவறை, குழியலறை ஆகியவற்றை ஆய்வு செய்து, அதன் தற்போதைய நிலை, மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணி குறித்த அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.