தனியார் பள்ளி கட்டண விவரம் இணையதளத்தில் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்களை, தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மூன்று
ஆண்டுகளுக்கு ஒருமுறை, கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

இது, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற, நீதிபதி சிங்காரவேலர் தலைமையிலான குழு மூலம், பள்ளிகளின் கட்டமைப்புகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளி வாரியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை, தமிழக அரசின் இணையதளத்தில் (http://www.tn.gov.in/) பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு உள்ளது. மாவட்ட வாரியாக உள்ள பள்ளிகளில், வகுப்பு வாரியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...