முப்பருவ சமச்சீர் முறை அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்படுமா? மத்திய அரசு ஆய்வு!

தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க, தமிழக அரசு மேற்கொள்ளும் முறையை, அனைத்து மாநிலங்களும் பின்பற்ற, மத்திய அரசு விரைவில் அறிவுறுத்த உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி தொடர்பான மத்திய ஆலோசனை குழு
கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. அனைத்து மாநில கல்வி அமைச்சர்களும் பங்கேற்ற அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளாவன:

கடந்த, 2010 முதல், தமிழக பள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க பல நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. சமச்சீர் கல்வி, முப்பருவ கல்வித் திட்டத்தின் படி, பாட புத்தகங்களை மூன்றாக பிரித்தல் என, புத்தகப் பை எடை கூடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. அதுபோல, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும், புத்தக சுமையை குறைக்க பல நவீன முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றை இணைத்து, தேசிய அளவில் விரைவில் புதிய கொள்கை பின்பற்றப்படும்.

இவ்வாறு, அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...