பங்கேற்காத நர்சுகளுக்கு இறுதி வாய்ப்பு!

 நர்ஸ் பணிக்கு தேர்வாகி, சான்றிதழ் சரிப்பார்ப்பில் பங்கேற்காதவர்கள், நாளை நடக்கும் இறுதிகட்ட சரிப்பார்ப்பில் பங்கேற்கலாம்; இதை தவறவிட்டால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்ஸ் உட்பட, 7,243 நர்சுகள் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதம், இதற்கான போட்டித்தேர்வு நடந்தது; 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். மதிப்பெண் அடிப்படையில், 7,243 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு பெற்றவர்களின் சான்றிதழ்களை சரிப்பார்க்கும் பணி, ஜூலை, 27ம் தேதி முதல், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகத்தில் நடக்கிறது.

சான்றிதழ் சரிபார்க்கும் பணி, இன்று நிறைவடைகிறது. ஆனால், ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட தேதியில் பங்கேற்க தவறியவர்கள், மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சான்றிதழ் சரிப்பார்ப்பில் பங்கேற்காதவர்கள், நாளை (ஆக., 13) நடக்கும், இறுதிகட்ட சான்றிதழ் சரிப்பார்ப்பில் பங்கேற்கலாம்; இந்த வாய்ப்பையும் தவற விட்டால், வேலைக்கான பரிந்துரைப் பட்டியலில், அவர்களுடைய பெயர் இடம் பெறாது என, அறிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...