ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், ஆசிரியர் பட்டய படிப்பு உடனடி சேர்க்கை கலந்தாய்வு நாளை (22ம் தேதி) நடக்கிறது.
கல்வித்துறை இயக்குனர் குமார் விடுவித்துள்ள செய்திக் குறிப்பு:
அரசு கல்வித்துறையில், பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில்,மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், 2015-16 ம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பட்டயப் படிப்பில் உடனடி சேர்க்கை கலந்தாய்வு, லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நாளை (22ம் தேதி), காலை 10:00 மணிக்கு நடக்கிறது.,கல்லுாரியில் சேர்த்து சேர்க்கை பெறாதவர்கள், இது வரை விண்ணப்பிக்காத பிளஸ்2 வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அட்டவணை இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். சேர்க்கைக்கான அதிகபட்ச வயது வரம்பு 29 ஆகும்.
கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் ரூ.1000 மற்றும் உண்மை சான்றிதழ்களை நகல்களுடன் கொண்டுவர வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.